Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்

ஒரு முறை பாதுகாப்புத் துறை அமைச்சராக அப்போது இருந்த ஆர். வெங்கட்ராமன் கலாமை அழைத்து,’ ஒவ்வொரு கட்டமாக ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கு பதிலாக ஒருங்கிணைந்த ஏவுகணைத் திட்டத்தை நாம் ஏன் செயல் படுத்தக் கூடாது?’ என்று கேட்டார். இந்தக் கேள்வி கலாமிற்கு தூண்டுதலாக அமைந்தது. ஏவுகணைகளை உருவாக்குவதில் கலாம் தீவிரமாக இறங்கினார். அந்த சமயத்தில் அவரது சகோதரி மகள் திருமணம் நடைபெற இருப்பதாக அழைப்பு வந்ததும், அதனை தனக்கு இருந்த வேலைப் பளு காரணமாக வேறு வழி இன்றி பொருட்படுத்தாமல் தனது வேலையில் மட்டுமே தீவிரமாக இருந்தார். இந்தச் செய்தியை கேள்விப்பட்டார் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ஆர்.வெங்கட்ராமன். உடனே கலாமை அழைத்து அவரது சகோதரி மகளின் திருமணத்திற்கு அவசியம் சென்று வர வேண்டும் என்று கூறி தனி விமானம் ஒன்றையும் ஏற்பாடு செய்து கலாமிற்குக் கொடுத்தார். அந்தத் தனி விமானத்தின் உதவியின் மூலம் தனது சகோதிரியின் மகளின் திருமண விசேஷத்தில் சந்தோஷமாகக் கலந்து கொண்டு உடனுக்குடன் டில்லி திரும்பினார் கலாம். அத்துடன் கடுமையான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரது அயராத உழைப்பிற்குப் பலனாய் ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை 250 கி.மீ வரையில் கொண்டு சென்று தரையில் இருந்து தரையில் உள்ள ஒரு இலக்கைத் தாக்கும் 'பிருத்திவி' ஏவுகணையைக் கண்டறிந்தார். பிருத்வியை தொடர்ந்து ஆகாஷ், திரிசூல், நாக் மற்றும் அக்னி ஏவுகணைகளையும் கலாம் கண்டு அறிந்தார். அத்துடன் அர்ஜுன் என்ற பீரங்கியையும் கலாம் தனது கடுமையான உழைப்பின் மூலமாக உருவாக்கினார். அடுத்த கட்டமாக ஆள் இல்லாத விமானத்தையும் தனது குழுவின் உதவியுடன் கண்டறிந்து நாட்டுக்கு அர்ப்பணம் செய்தார் கலாம். இப்படியாக நாட்டின் ராணுவ பலத்தைப் பெருக்க ஒரு விஞ்ஞானியாகக் கலாமின் பங்கு மிக முக்கியமாகக் கருதப்படுகிறது

Comments

Popular Posts