Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமின் பிறப்பும் வளர்ப்பும்

இந்தியாவில் உள்ள புனிதத் தலங்களில் வடக்கே இருப்பது ‘காசி’ என்றால் தெற்கே இருப்பது ‘இராமேஸ்வரம்’ ஆகும். இவை இரண்டுமே சிவ தலங்கள் என்பது யாவரும் அறிந்தே. இப்படிப் பட்ட சிறப்பு வாய்ந்த 'இராமேஸ்வரத்தில்’ 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில் 'அவுல்பக் ஜெயின் அலாவுதீன் மரைக்காயர் - ஆசியம்மா' என்ற தம்பதிகளுக்கு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார் அப்துல் கலாம். மரைக்காயருடைய குடும்பம் மிகவும் பெரிய குடும்பம். அதில் கலாம் ஏழாவது பிள்ளையாகப் பிறந்தார். அப்துல் கலாமின் தந்தை ஒரு இஸ்லாமியராக இருந்த போதிலும் கூட அவரது தோழர்களில் பலர் இந்து மதத்தையும், கிறிஸ்துவ மதத்தையும் சார்ந்தவர்களாகவே இருந்தார்கள். இந்த மத ஒற்றுமையை தனது குழந்தைப் பருவத்திலேயே பார்த்த கலாம் அவர்கள். தமது வாழ் நாள் முழுவதுமே அனைத்து மதத்தினரிடமும் மத நல்லிணக்கத்துடன் நடந்து கொண்டார். அத்துடன் தனது தாயாரிடம் நீதிக் கதைகளையும், பிறருக்கு உதவும் பண்பினை தந்தையிடமும் கற்றுக் கொண்டார். இப்படியாக வறுமையில் வளர்ந்தாலும். வறுமையிலும், செம்மை என்று சொல்வார்களே அந்த விதத்தில் தான் கலாம் வாழ்ந்தார்.

Comments