கலாமின் முதல் சம்பாத்தியம்
கலாம் மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்த சமயம் இரண்டாம் உலகப் போர் மிகக் கடுமையாக மூண்டது. அது 1939 ஆம் வருடம். அப்போது மார்க்கெட்டில் புளியங்கொட்டைக்கு ஏகப்பட்ட கிராக்கி. எதனால் இப்படி என்பதை எல்லாம் கலாம் அவர்களால் அந்தக் குறிப்பிட்ட வயதில் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும், அவர் புளியங்கொட்டைகளை சேகரித்து மசூதி தெருவில் இருந்த ஒரு மளிகைக் கடையில் விற்பார். இந்த வியாபாரத்தில் கலாமிற்கு தினமும் ஒரு அணா கிடைக்கும். அதனைப் பத்திரமாகக் கொண்டு போய் தனது தாயாரிடம் கொடுத்து மகிழ்வார். இப்படியாகத் தனது சிறு வயதிலேயே குடும்பச் சுமையை உணர்ந்து அதனை தனது பிஞ்சுக் கரங்களால் தீர்க்க நினைத்தவர் நம் கலாம். இந்தியாவின் உண்மையான சூப்பர் ஸ்டார் இவர் மட்டுமே.
Comments
Post a Comment