கலாமின் கல்லூரி வாழ்க்கை
உயர்நிலைப் பள்ளிப் படிப்பை இராமநாதபுரத்தில் முடித்து விட்டு, தனது கல்லூரிக் கல்விக்காக திருச்சி புனித சூசையப்பர் கல்லூரியில் சேர்ந்தார் கலாம். அத்துடன் இயற்பியல் படிப்பை அந்தக் கல்லூரி விடுதியிலேயே தங்கிப் படித்து வந்தார் கலாம். அவர் தங்கி இருந்த அறையில் அவரைத் தவிர இந்து, கிறிஸ்தவ மாணவர்களும் இருந்தனர். அதனால் மும்மத வழிபாடும் அங்கு நடந்தது. அத்துடன் மும்மதத்தை சேர்ந்தவர்களும் ஒற்றுமையுடன் பழகி வந்தனர். 'கடவுள் ஒருவர் தான், அவரை வழிபாடும் முறை தான் வெவ்வேறு' என்பதனை கலாம் மற்றவர்களிடம் மிகத் தெளிவாகவும் ஆணித்தனமாகவும் கூறி வருவார்.
அத்துடன் தனக்குக் கல்வி கற்றுத் தந்த தனது ஆசிரியர்களைத் தெய்வமாகக் கருதி போற்றி வணங்கி வந்தார். அதனால் அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் தனது கல்லூரிக் காலத்திலும் கூட கலாம் பெற்றுக் கொண்டார். இப்படியாகக் கல்லூரியிலும் கலாம் ஒரு நல்ல மாணவராக இருந்து வந்தார்.
மேலும், கலாமின் கல்லூரிக் காலத்தில் அவருக்கு வழிகாட்டியாக இருந்தவர் ஃ பாதர் செக்ளிரா என்பவர் தான். அவர் மிகவும் எளிமையானவர். அத்துடன் அன்பு மிக்கவரும் கூட. அவர் அந்தக் கல்லூரி விடுதியின் கண்காணிப்பாளராக இருந்து வந்தார்.
அத்துடன் அவர் அந்தக் கல்லூரியின் பேராசிரியராகவும் பணி ஆற்றினார். அவர் மாணவர் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இருந்தார். அதனால் அனைத்து மாணவர்களும் அவரை மிகவும் விரும்பி வந்தனர். அந்த வகையில் கலாமின் மானசீக வழிகாட்டி அவர் தான். அவர் கலாமிற்கு மட்டும் அல்லாமல் மாணவர்கள் அனைவருக்குமே பாட அறிவுடன், பிறதுறை சம்மந்தமான அறிவையும் உடன் ஊட்டி வந்தார்.
Comments
Post a Comment