Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்

சிறு வயதில் இருந்தே கலாம் அனைவரிடமும் மிகவும் அன்பாகப் பழகி வந்தார். அவரிடம் பல நல்ல குணங்கள் இருந்தன. அவரது அந்த நல்ல குணங்கள் ஆசிரியர்களிடம் அவருக்கு நல்ல மதிப்பைப் பெற்றுத் தந்தன. அந்த வகையில் கலாம் படித்துக் கொண்டு இருந்த பள்ளியில் அறிவியல் ஆசிரியராக இருந்தவர் சிவசுப்பிரமணிய அய்யர். அவர் பொதுவாகவே அனைத்து மாணவர்களுடனும் அன்புடன் பழகுவார். அதிலும் அவருக்கு கலாம் என்றால் கொள்ளைப் பிரியம். அவர் தான் கலாமிற்கு அறிவியல் மீது இருந்த ஆர்வத்தை தூண்டியவர் என்றும் கூடச் சொல்லலாம். ஒரு நாள் ஆசிரியர் சிவசுப்பிரமணிய அய்யர் கலாமின் மீது அவருக்கு இருந்த அன்பின் காரணமாக அவரை தன் வீட்டு விருந்துக்கு அழைத்தார். கலாமும் ஆசிரியரின் வீட்டுக்கு அன்புடன் ஓடி வந்தார். காலம் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்ட அந்த ஆசிரியரின் மனைவி அவருக்கு உணவு பரிமாற மறுத்து விட்டார். மனைவியின் இந்தச் செய்கையால் சிவசுப்பிரமணிய அய்யர் மிகவும் வருந்தினார். ஆனால், அதே சமயத்தில் கலாமின் மனம் வேதனை அடையாத படி தாமே கலாமிற்கு உணவு வகைகளை பரிமாறி அவர் அருகில் அமர்ந்து உணவருந்தினார். அப்போது மாணவரான கலாம் தனது ஆசிரியரின் அந்த உயர் பண்பினை எண்ணி மிகவும் மனம் நெகிழ்ந்தார். அத்துடன் சற்று இயற்கையாகவே கூச்ச சுபாவம் கொண்ட கலாம் அமைதியாக உணவை உட்கொண்டார். எச்சில் படுத்தாமல் பக்குவமாக தண்ணீர் கோப்பையில் இருந்த நீரை அருந்தினார். விருந்து முடிந்தவுடன் வீட்டிற்கு கலாம் புறப்பட்ட சமயம். ‘அடுத்த வாரமும் நீ இங்கு சாப்பிட வர வேண்டும். இது எனது அன்புக் கட்டளை’ என்று கூறினார் ஆசிரியர். ஆசிரியர் கூறிவிட்டால் மறுக்க முடியுமா? அதனால் அடுத்த வாரமும் குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியரின் வீட்டை அடைந்தார் கலாம். இந்த முறை ஆசிரியர் உணவு பரிமாறுவதற்குப் பதிலாக அவரது மனைவியே எந்த வித வற்புறுத்தலும் இல்லாமல் கலாமை புரிந்து கொண்டு உணவை அன்புடன் அவருக்குப் பரிமாறினார். அப்போது அதனைக் கண்டு சிவசுப்பிரமணிய அய்யர் மட்டும் அல்ல கலாமும் கூட மனம் நெகிழ்ந்தார். இந்தச் சம்பவமே பிற்காலத்தில் சாதி மத வேற்றுமையைக் கடந்து ‘நான் முதலில் ஒரு இந்தியன்’ என்ற உணர்வை கலாமிற்கு தந்தது எனலாம்.

Comments