Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமின் அன்பு

ஒரு முறை அந்த விஞ்ஞானக் கூடத்தில் வேலை பார்த்துக் கொண்டு இருந்த ஒரு விஞ்ஞானி, தன் மேலதிகாரியிடம்,’ நான் என் பிள்ளைகளை இன்று கண் காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் வாக்குக் கொடுத்திருக்கிறேன். மாலை ஐந்தரை மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும்‘ என்று கேட்டுக் கொண்டார். மேலதிகாரியும் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். எனினும், வேலை மும்முரத்தில் ழூழ்கிய அந்த விஞ்ஞானி கடிகாரத்தைப் பார்த்த சமயம், மணி இரவு எட்டரை. இனி என்ன? பிள்ளைகள் வீட்டில் பிரளயம் கிளப்புவார்கள் என்ற பயத்துடனேயே வீட்டுக்குச் சென்றார் அந்த விஞ்ஞானி. அப்போது வீட்டில், அவரது மனைவி மட்டுமே இருந்தார்கள். ‘குழந்தைகள் எங்கே..?’ என்று கேட்டதும் மனைவி சொன்னார்கள் ‘சரியாக ஐந்தரை மணிக்குக் கிளம்பி கண்காட்சிக்குப் போய் விட்டார்கள். உங்கள் மேலதிகாரி தான் வந்து அழைத்துக் கொண்டு சென்றார்’ என்று. விஞ்ஞானி வேலையில் ழூழ்கிவிட்டதைப் பார்த்த மேலதிகாரி, அவர் கவனத்தையும் கலைக்க விரும்பவில்லை, குழந்தைகள் கனவையும் கலைக்க விரும்பவில்லை. தானே சென்று அந்த விஞ்ஞானியின் குழந்தைகளை அழைத்துச் சென்றார். அந்த மேலதிகாரியின் பெயர் தான் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

Comments