கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு
ஒரு முறை அக்கினி ஏவுகணையில் இலகு கனமான கார்பன் அலோகத்தைப் பயன்படுத்தி அதன் எடையை பெருமளவில் குறைத்தார் கலாம். இந்த ஆராய்ச்சியை ஆக்க பூர்வமாக மாற்ற சித்தம் கொண்ட நமது கலாம். இதே யோசனையை அடிப்படையாகக் கொண்டு போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்கள், எளிதில் தூக்கி நடக்கக் கூடிய அதிக கணம் இல்லாத உதவிக் கருவிகளை கண்டு பிடித்தார். இந்த அறியக் கண்டு பிடிப்பு மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை அவருக்குப் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் ஒருமுறை ஒரு மேடையில், தான் கண்டு பிடித்த கண்டு பிடிப்புகளிலேயே தனக்கு மிகவும் பிடித்த கண்டுபிடிப்பு உண்மையில் இதுவே என்றும் கூறி இருக்கிறார் கலாம்.
இப்படியாகக் கலாம் தனது அறிய கண்டு பிடிப்புகளால் இந்தியாவின் பெருமையை உயர்த்தியவர். எனினும், கலாம் தனக்கென பங்களா, விலை உயர்ந்த கார் என எதுவுமே வைத்துக் கொள்ளவில்லை. மேலும் அவர் நினைத்து இருந்தால் மற்ற விஞ்ஞானிகள் போல வெளிநாட்டில் சொகுசாக வாழ்ந்து இருக்கலாம். ஏனெனில், அவரது அறிவுக்கு வெளிநாடுகள் அதிகப் பணத்தை அள்ளிக் கொடுக்கக் காத்துக் கொண்டு இருந்தன. எனினும், கலாம் தனது அறிவை தாய் நாட்டிற்காக மட்டுமே செலவழித்தார். அதன் மூலம் சிறந்த தியாகியாகப் பார்க்கப்படுகிறார்.
ஒரு முறை தனது எழுபதாவது வயதில் தனது பணியில் இருந்து ஓய்வு பெற விரும்பினார் கலாம். ஆனால் அப்போது பாரதத்தை ஆண்ட பிரதமர் வாஜ்பாய் அவரைப் பதவியில் இருந்து விடுவிக்க விரும்பவில்லை. அதனால் அந்த வயதிலும் தொடர்ந்து பணி ஆற்றி வந்தார் கலாம்.
Comments
Post a Comment