Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு

கலாமின் அறிவியல் அறிவைப் பற்றியும் 'நந்தி' விமானம் பற்றியும் நன்கு கேள்விப்பட்டு இருந்தார் பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன். அது மட்டும் அல்ல மும்பையில் இயங்கி வந்த இந்திய விண் வெளி ஆய்வுக் குழுவில் ராக்கெட் பொறியாளர் தேவை என்ற விபரத்தைச் சொல்லி கலாமை விண்ணப்பிக்க செய்தார் மேனன். மேனன் அப்போது டாடா ஆய்வு நிலையத்தில் இயக்குனராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கலாமும் மேனன் சொன்னபடியே அப்பதவிக்கு விண்ணப்பித்தார். கலாமின் தகுதியையும், திறமையையும் கண்ட மும்பை தேர்வுக் குழுவினர் அன்றைய தினமே ராக்கெட் பொறியாளர் பதவியினை கலாமுக்கு அளித்தனர். இது ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக கலாமிற்கு இருந்தது. இதில் இருந்து தான் கலாமின் வளர்ச்சி துவங்கியது. இந்திய நாட்டை வல்லரசு நாடாக ஆக்க வேண்டும், அதற்குத் தேவையான இராணுவத் தளவாடங்களையும், ஏவுகணைகளையும் நமது நாட்டில் தயாரித்து. அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நாளும் அயராது உழைத்தார் கலாம்

Comments