கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை
எம். ஐ. டி. யில் தனது கல்விப் படிப்பை நிறைவு செய்யும் சமயம் பிரிவு உபசார விழா நடைபெற்றது. தேநீர் விருந்துக்குப் பிறகு மாணவர்கள் தத்தமது துறைப் பேராசிரியர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ஆயத்தம் ஆயினர். கலாம் மட்டும் அடக்கத்தின் காரணமாக மூன்றாம் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். ஏற்கனவே அவர் குள்ளமான உருவம் கொண்டு இருந்ததால் கூட்டத்தில் அவர் நிற்பதே தெரியவில்லை. அதனை கவனித்த குழுப் பேராசிரியர் கலாமை முதல் வரிசைக்கு வரும்படியாக அழைத்தார். கலாமும் தயங்கித் தயங்கி சென்றார். அவ்வாறு தயங்கித் தயங்கி சென்ற கலாமின் முதுகில் தட்டிக் கொடுத்த பேராசிரியர்,’ கலாம்! தலை சிறந்த மாணவர் நீங்கள். எதிர்காலத்தில் புகழ் பெறப் போகின்றனர். அது மட்டும் அல்லாமல் எங்களுக்கும் கூட புகழை சேர்க்கப் போகிறவர் தாங்கள் தான். அதனால் தயங்காமல் முதல் வரிசையில் வந்து அமருங்கள்’ என்று கூறினார். அது தான் கலாம் வாழ்க்கையில் சந்தித்த முதல் பாராட்டு அந்தப் பேராசிரியரை ஜனாதிபதியாகியும் கூட கலாம் நினைவு கூர்ந்து உள்ளார். அந்த பேராசிரியர் பெயர் தான் ஸ்பாண்டர். அப்பேராசிரியரின் பாராட்டு கலாமுக்கு மிகுந்த நெகிழ்ச்சியை உண்டு பண்ணியது. அது மட்டும் அல்ல அந்தப் பேராசிரியருக்கு அப்போதே கலாம் நன்றாக எதிர்காலத்தில் வருவார் என்பது தெரிந்து இருந்தது. இது உண்மையில் இன்னொரு வியப்பு தான்.
Comments
Post a Comment