Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமின் உணவுப் பழக்கம்

திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் அரசின் கல்வி உதவித்தொகை மூலம் அப்துல் கலாம் இயற்பியல் படித்து வந்த வேளையில் குடும்ப வறுமையால் அந்த உதவித் தொகையை மட்டும் வைத்தே வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டது. எனவே, அதிகம் செலவாகும் என்பதால் அவர் அசைவ உணவு உண்பதை தவிர்த்தார். பின்னாளில், அவருக்கு சைவமே மிகவும் பிடித்துப்போனதால், கடைசி வரை சைவப் பிரியராகவே இருந்து விட்டார். கலாம் அவரது அம்மா ஆஷியம்மாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவர், அவ்வப்போது அம்மாவுடன் சமையலறையிலேயே உணவு உண்ணும் வழக்கம் அவருக்கு இருந்தது. வாழை இலையில் அம்மா பரிமாறும் சாம்பார் சாதமும், தேங்காய் சட்டினியும் அவருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருந்துள்ளது. இதுதவிர, பிரபல ஐய்யங்கார் வகை உணவுகளான புளியோதரை, வெந்தயக் குழம்பு போன்றவற்றின் சுவைக்கு இவர் மனதைப் பறிகொடுத்தார். தனது சைவ உணவுத் தேர்வு தொடர்பாக கூறும்போது, ‘காய்கறிகளால் ஆன எதையேனும் சூடாக கொடுத்தாலே போதும். அதைக்கொண்டே காலத்தை கடத்தி விடுவேன்’ என தெரிவித்தார். கல்லூரி காலத்தில் எப்போதாவது ’பண்டிகை விருந்து’ போல் அவர் உண்ட அசைவ உணவு ‘கேரள புரோட்டாவும், முட்டை மாசாலாவும்’ என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து, கேரளா வரை வெவ்வேறு இடங்களில் பணிக்காக செல்ல வேண்டியிருந்த போது, தமிழக உணவு வகைகளுக்கும், சமையலுக்கும் ஏங்கியவராய் தனது இளமைக் காலத்தில் நெடுந்தூரம் பயணித்திருக்கிறார், கலாம்

Comments