Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாமின் தமிழ் ஆர்வம்

அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் அதீத ஆர்வத்தை காட்டிய கலாம். தனது தாய் மொழியாம் தமிழ் இலக்கியத்திலும் இடைவிடாத ஈடுபாடு கொண்டு இருந்தார். அதன் விளைவாக சிறு வயதில் இருந்தே கட்டுரைப் போட்டி, தமிழ் பேச்சுப் போட்டி என அனைத்திலும் கலந்து கொண்டு கலாம் பல விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆனார். கலாமின் திறமைகள் அனைத்திற்கும் அவரது பேராசிரியர்களும் துணை நின்றனர். ஒரு முறை எம். ஐ. டி. நடத்திய கட்டுரைப் போட்டியில் 'ஆகாய விமானம் கட்டுவோம்' என்ற தலைப்பு இடம் பெற்று இருந்தது. ஆர்வமுடன் அந்தக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டார் கலாம். அத்துடன் அந்தப் போட்டியில் அவர் எழுதிய கட்டுரைக்கு முதல் பரிசு கிடைத்ததோடு அந்தக் கட்டுரை ஆனந்த விகடன் வார இதழிலும் பிரசுரமானது. அந்த இதழின் ஆசிரியரும் கலாமிற்கு பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இப்படியாக நாட்டுப் பற்றையும் மொழிப் பற்றையும் தனது இரு கண்களாகப் போற்றி வந்தார் கலாம்.

Comments