Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாம் இழந்த வாய்ப்பு

தனது கல்விப் படிப்பை முடித்த கலாம் பெங்களூர் சென்றார். அங்கே 'ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்' நிறுவனத்தில் பயிற்சி பெற்றார். அங்கு விமானத் தொழில் நுட்பத்தில் தனது அறிவை மேலும் மேம்படுத்திக் கொண்டார். அத்துடன் விமானத்தை இயக்குபவர்களும், பயிற்சி அளிப்பவர்களும் விமானப் பொறியியல் பட்டதாரிகள் அல்ல. உண்மையில் எந்த விதப் பட்டமும் பெறாமல் தனது அனுபவத்தைக் கொண்டு இயந்திரங்களை இயக்கும் மெக்கானிக்குகள் தான் உண்மையான திறமை சாலிகள் என்பதை கலாம் அறிந்து கொண்டு அவர்களுடன் நன்கு பழகினார். அதன் காரணமாக அவர்களிடம் இருந்து பலதரப்பட்ட அனுபவ பாடங்களை மிகப் பொறுமையாக கற்றுக் கொண்டார். அதிலும் குறிப்பாக விமானத்தைப் பறக்க வைக்கும் 'புரபெல்லர்' இயந்திரங்களைப் பற்றி கலாம் நன்கு அறிந்து கொண்டார். விமானத் தொழில் நுட்பத்தில் இருந்த அதீத ஈடுபாட்டின் காரணமாக எம். ஐ. டி. சான்றிதழ் கொண்டு விமானப் படையில் பணிபுரிய விண்ணப்பம் செய்து இருந்தார் கலாம். எனினும் ‘டேராடூனில்’ உள்ள விமானப் படை தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் வேலை பெரும் வாய்ப்பினை கலாம் இழந்தார். நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்த கலாம் மிகவும் வருந்தினார். மனம் நிம்மதி இன்றி தவித்தார். அதனால் மன அமைதி வேண்டி அவர் ஒரு இஸ்லாமியராக இருந்தும் கூட ரிஷிகேசம் சென்றார். அங்கிருந்த சுவாமி சிவானந்தரை சந்தித்து தனது மன வேதனையை அவரிடம் பகிர்ந்து கொண்டார். கலாம் சொன்னதைக் கேட்ட சுவாமிஜி,’ இதனைத் தோல்வி என்று நீ எண்ண வேண்டாம். விமானப்படை விமானியாக நீ ஆக வேண்டும் என்று உனக்கு விதிக்கப் படவில்லை போலும். அதை விட இறைவன் உனது வாழ்க்கையில் செயல் படுத்த மிகப் பெரியதொரு திட்டத்தை வைத்து உள்ளார் போலும். அது விரைவில் உனக்கு கிட்ட வேண்டும் என்று நானும் அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கவலையை விடு. சந்தோஷமாக இரு. எல்லாம் வாழ்க்கையில் நல்லதாகவே நடப்பத்தை நீ இனி காண்பாய்’ என்று கூறி ஆசிர்வாதம் செய்து கலாமை அனுப்பி வைத்தார். சுவாமி சிவானந்தரை சந்தித்தது கலாமிற்கு மிகுந்த ஆறுதலை அளித்தது. சுவாமிஜியை சந்தித்த பிறகு கலாம் ரிஷிகேஷில் இருந்து புது டில்லியில் இருந்த பாதுகாப்பு அமைச்சகத்தில் நடைபெற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றார். அதில் கலாம் தேர்ந்தெடுக்கப் பட்டதின் பேரில் முதுநிலை விஞ்ஞான உதவியாளராகப் பணியில் நியமிக்கப்பட்டார். தான் நினைத்ததை விட ஒரு நல்ல வாய்ப்பை தந்த இறைவனை கலாம் வேண்டினார். ஆண்டவனுக்கு நன்றியும் கூறினார். இந்தச் சம்பவத்தை பிற்காலத்தில் அடிக்கடி தனது வாழ்க்கையில் நினைத்துப் பார்த்து நெகிழ்ந்து உள்ளார் கலாம்.

Comments