கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து
வெற்றிகரமாக ராக்கெட் ஆராய்ச்சியை நிகழ்த்திய கலாம் தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக ‘செயற்கைக் கோள் ஏவுகலம்’ பற்றிய தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
தும்பா ராக்கெட் தளத்தில் இரவு பகலாக கலாமும் அவருடன் இருந்த சக விஞ்ஞானியான சுதாகர் என்பவரும் 'ராக்கெட்' புறப்படுவதற்கு முன்பு கவனிக்க வேண்டிய பணிகளைச் செய்து கொண்டு இருந்தனர். அப்போது இருவரும் சேர்ந்து ராக்கெட்டுக்குத் தேவையான எரிபொருளை தயாரித்துக் கொண்டு இருந்தனர்.
அந்த சமயத்தில் யாருமே எதிர்பாராத விதத்தில் சுதாகரின் நெற்றியில் இருந்து ஒரு துளி வியர்வை அந்த எரிபொருள் கலவையில் விழுந்து விட்டது. அவ்வளவு தான். அடுத்த நொடியில் அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் பயங்கரமான வெடிச் சத்தம் கேட்டது. அதில் அந்த ஆய்வுக் கூடமே குலுங்கியது. எங்கும் தீ பரவத் தொடங்கியது. சிலருக்கு பயங்கரத் தீக் காயமும் ஏற்பட்டது. அந்தத் தீயை அணைக்கும் மார்க்கம் அறியாமல் திகைத்துக் கொண்டு இருந்தனர் அனைவரும்.
தண்ணீரைப் பயன்படுத்தலாம் என்றால் தண்ணீர் கொண்டு அந்தத் தீயை அணைக்கவே கூடாது. அப்படிச் செய்தால் அந்தத் தீ மேலும் கொழுந்து விட்டு எரியத் தொடங்கிவிடும். மொத்தத்தில் என்ன செய்வது? எப்படி உயிரைக் காப்பாற்றிக் கொள்வது? சிந்திக்கக் கூட அங்கு இருப்பவர்களுக்கு அவகாசம் இல்லை.
அந்த சமயத்தில் விஞ்ஞானி சுதாகர் கண்ணாடி ஜன்னல்களைத் தனது கைகளால் உடைத்தார். அதில் அவருக்கு சற்று அதிகமாகவே காயம் ஏற்பட்டது. இருந்தாலும் அதனைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் முதலில் கலாமைத் தூக்கி வெளியே தள்ளினார். காரணம் தனக்கு என்ன ஆனாலும், கலாமின் அறிவு நாட்டுக்குத் தேவை என்று அவர் நன்கு உணர்ந்து இருந்தார். பின்னர் தான், சுதாகர் வெளியே வந்தார். அங்கு இருந்த மற்றவர்களும் அதன் வழியே வெளியே வந்தனர்.
அனைவரும் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். அதன் மூலம் பூரண நலம் பெற்றனர். அறிவியல் ஆராய்ச்சிகள் என்றாலே இப்படித் தானே! அதில் தோல்விகள், தடங்கல்கள், ஆபத்துக்கள் என அனைத்துமே நிறைந்து காணப்படும்.
நமது கலாம் அவர்க
Comments
Post a Comment