Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்

அப்போது அறிஞர் அண்ணாவின் அலை தமிழகம் முழுக்க அடித்துக் கொண்டிருந்தது. பெரியாரை விட்டு விலகிய பிறகு அண்ணா தமிழகம் முழுக்கச் சுற்றுப்பயணம் செய்து தமிழக மக்களிடையே திராவிடக் கொள்கைகளைப் பரப்பினார். தினமும் செய்தித் தாள்களில் அண்ணாவின் பேச்சைப் பற்றி அறிந்த கலாமுக்கு அண்ணாவின் பேச்சை நேரில் கேட்க வேண்டும் என்கிற பேராவல் உண்டானது. தன் நண்பர்களிடம் இதுபற்றி விவாதித்தார். நாம் எங்கே தனியாகச் சென்று அவர் பேச்சைக் கேட்கமுடியும்? அவரை நம் பள்ளி விழாவுக்கு அழைப்போம். நிச்சயம் வருவார் என்று கலாமுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. மிகப்பெரிய தைரியம் தான். ஆனாலும் அந்த வயதில் இது ஒரு வீரத்தீர செயலாக இருந்தது கலாமுக்கு. யோசனை உண்டான அடுத்தநாள் கலாமும் அவர் நண்பர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறினார்கள். கூட வேறு எந்தப் பெரியவர்களையும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஏன்? பள்ளித் தலைமையாசிரியருக்கும் கூட தகவல் சொல்லவில்லை. சென்னை வந்து இறங்கினார்கள். நாலு பேரிடம் விசாரித்து எப்படியோ அண்ணாவின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்தும் விட்டார்கள். கை வைத்த பனியன், லுங்கி அணிந்து கொண்டிருந்த அண்ணாவின் எளிமை கலாமை மிகவும் ஈர்த்தது. வந்த விவரத்தைக் கேட்டார் அண்ணா. சொன்னார்கள். ‘இப்போது என்னால் வர முடியாதே!’ என்றார். உடனே கலாமுக்கும் அவர் நண்பர்களுக்கும் அந்த இடத்திலேயே முகம் வாடியதைக் கண்டு, நான் திருவையாருக்கு வருகிற போது கட்டாயம் உங்கள் பள்ளிக்கு வருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்தார் அண்ணா. ராமநாதபுரத்துக்குப் பத்திரமாகத் திரும்பிய பிறகே கலாமுக்கு உதறல் எடுத்தது. ‘நினைத்தது போல அண்ணாவைப் பார்த்துவிட்டோம். ஒருவேளை அவர் பேச வருகிறேன் என்று தகவல் கொடுத்துவிட்டால்? என்ன செய்வது?’ பயந்தது போலவே கலாமுக்குத் தகவல் வந்தது. அண்ணா பேச வருகிறார் என்று. வேறு வழியில்லை. இனியும் மறைக்க முடியாது. பள்ளித் தலைமையாசிரியரிடம் கலாமும் அவர் நண்பர்களும் நடந்ததைச் சொன்னார்கள். அவ்வளவு தான். தாம் தூம் என்று குதிக்க ஆரம்பித்தார் தலைமையாசிரியர். என்ன செய்யமுடியும்? அண்ணா வருவதாகச் சொல்லிவிட்டார். தடுக்கமுடியாது. ராமநாதபுரம் அண்ணாவை பெரும் கரகோஷத்துடன் வரவேற்றது. ஸ்வார்ட்ஜ் பள்ளியிலும் பொதுமக்கள் குவிந்தார்கள். மேடையேறினார் அண்ணா. ‘என்ன பேசவேண்டும். சொல்லுங்கள்’ என்றார் கம்பீரத்தோடு. கலாமுக்குப் பதற்றம் அதிகமாகிவிட்டது. ‘இவருக்கு நாம் என்ன ஆணையிடமுடியும்?’ என்று நினைத்துக் கொண்டார். ஆலோசனை செய்தார்கள். இறுதியில், ‘நதிகள் பற்றிப் பேசுங்கள் அண்ணா!’ என்று கேட்டுக் கொண்டனர். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார் அண்ணா. மனிதகுலம் தோன்றிய நாள் முதல் இன்று வரை மனிதனின் வாழ்வில் நதிகள் எத்தனை பெரிய பங்கு வகிக்கின்றன என்பதை ஒரு சொற்பொழிவாகப் பொழிந்தார். கலாம் அளவுக் கதிகமாக உணர்ச்சி வசப்பட்டார். கை வலிக்கக் கைத் தட்டினார். இப்படியாக, ஸ்வார்ட்ஜ் பள்ளியில் கலாமின் மறக்க முடியாத அனுபவமாக அண்ணாவின் வருகையும் பேருரையும் அமைந்தன.

Comments