கலாம் கண்ட களங்கள்
திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா ராக்கெட் நிலையத்தில் கலாம் அதி உன்னதமான ஏவுகணை ஆரய்ச்சிகளை மேற்கொண்டு இருந்த சமயம். ஒரு பயிற்சிக்காக இந்திய அரசாங்கம் அவரை 'நாசா' விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பியது. கற்றுக் கொள்வதில் அதீத ஆர்வம் கொண்ட கலாமும் அரசு ஆணைப்படி அகம் மகிழ்ந்து அவ்விடம் விரைந்தார்.
அமெரிக்காவில் இருந்த 'வர்ஜீனியா' மாநிலத்தில் ஹாம்டன் என்ற இடத்தில் அமைந்து இருந்தது அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையம். அங்கு விண்வெளி சம்மந்தமான பல நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தார் கலாம். தனது இடைவிடாத சிந்தனையாலும், அயராத உழைப்பாலும், துவளாத மனத்தாலும் மிகக் கடினமாகக் கருதப்பட்ட தொழில் நுணுக்கங்களையும் கூட கலாம் எளிதில் கைவரப் பெற்றார். இதனால் கலாமின் திறமையை அமெரிக்க மூத்த விஞ்ஞானிகளே பாராட்டினர். சிலர் அவரிடம் ஆசை காட்டி அமெரிக்காவிற்கு அவர் அறிவை விலை பேசினர். ஆனால் கலாம் அதற்கெல்லாம் விலைபோக வில்லை. இதற்கு அவரது தேச பக்தி தான் காரணம்.
Comments
Post a Comment