Labels

கலாமின் களங்கம் இல்லா நட்பு1 கலாமின் தமிழ் ஆர்வம்1 கலாமின் பிறப்பும் வளர்ப்பும்1 கலாமின் மனிதாபிமானம் மற்றும் அன்பு1 கலாமின் முதல் சம்பாத்தியம்1 கலாமின் வாசலை தட்டிய இன்னொரு வாய்ப்பு1 கலாமை விருந்துக்கு அழைத்த ஆசிரியர்1 கலாம் இழந்த வாய்ப்பு1 கலாம் ஒரு செயல் வீரர்1 கலாம் கண்ட களங்கள்1 கலாம் தந்தையிடம் பெற்ற உபதேசம்1 கலாம் தனது ஆராய்ச்சியின் போது சந்தித்த விபத்து1 கலாம் பரிசாகக் கேட்டது1 கலாம் பிரதமர் இந்திராகாந்தியை சந்தித்தல்1 கல்லூரிப் பிரிவு உபசார விழாவில் கலாம் ஒரு பார்வை1 சிறு வயதில் அறிஞர் அண்ணாவை சந்தித்த கலாம்1 சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்1 நாட்டின் இராணுவ பலத்திற்கு உதவிய கலாம்1 பொறுப்புகளை உணர்ந்தவர் கலாம்1 மக்கள் ஜனாதிபதியானார் கலாம்1 ராக்கெட் நாயகனின் முதல் ராக்கெட்1 ராஷ்டிரபதி பவனின் மறுமலர்ச்சி1 விக்ரம் சாராபாயின் மரணமும் கலாமின் வருத்தமும்1
Show more

கலாம் ஒரு செயல் வீரர்

எடுத்த பணியை முடிப்பதில் கலாமிற்கு நிகர் அவர் தான். கலாம் பணியில் சேர்ந்த சில தினங்களில் விமானத்தை வடிவமைக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனர் உயர் அதிகாரிகள். விமான வடிவமைப்பு நுட்பங்கள் பற்றி கலாம் மேலும் பல அனுபவ விஷயங்களை அறிய வேண்டி இருந்ததால் அவர் கான்பூர் செல்ல வேண்டி இருந்தது. அதனால் அவ்வூருக்கு விரைந்தார். அங்கு நாட் எம். கே. ஜெ. விமானம் இயங்கும் விதம் குறித்தும் அதன் அடிப்படை செயல்பாடுகள் குறித்தும் நன்கு அறிந்து கொண்டார். பிற்பாடு மீண்டும் புது டில்லி திரும்பி வந்து விமான வடிவமைப்புகள் பலவற்றை ஆராய்ந்து வந்தார். மூன்று ஆண்டுகள் இவ்வாறு கடந்தது. இறுதியில் ஹோவர் ரக விமானத்தை உருவாக்கும் அற்புதப் பொறுப்பு கலாமின் கரங்களில் தரப்பட்டது. மிகுந்த முனைப்புடன் அதற்காக இரவும், பகலுமாக உழைக்கத் தொடங்கினார் கலாம். அதனைக் கண்ட சில பொறாமை பிடித்த மூத்த விஞ்ஞானிகள் கலாமை பொறிந்து தள்ளினர். அத்துடன் 'கலாம் குழுவால் ஹோவர் ரக விமானத்தை ஒரு போதும் உருவாக்க முடியாது. அதிலும் கலாம் ஒரு கத்துக் குட்டி அவரிடம் இதுபோன்ற பொறுப்பை ஒப்படைக்கக் கூடாது' என்று கூறி கலாமை பரிகசித்தனர். தன் மீது விழும் கற்களையும் கூட படிக்கட்டாக நினைத்து அதனைக் கொண்டு உயர நினைப்பவர் தான் நமது கலாம். மற்றவர்கள் தன்னை ஏளனமாகவும், எகத்தாளமாகவும் நினைப்பதைப் பற்றி பொருட்படுத்தாத கலாம், எடுத்த பணியை முடித்துக் காட்டுவதில் எள்ளளவும் சோர்வு இல்லாமல் கடுமையாக உழைத்தார். ஒரு வருடத்தில் கலாம் நினைத்ததை விடவும் ஹோவர் ரக விமானம் வெற்றிகரமாக கலாமின் குழுவினரால் உருவாக்கப்பட்டது. அதனைக் கண்டு மூத்த விஞ்ஞானிகள் கூட உண்மையில் மலைத்து நின்றனர். அதற்கு 'நந்தி' என்ற பெயரை சூட்டினார் கலாம். அத்துடன் ‘இங்கே இருக்கும் வானூர்தியை உருவாக்கியது கருவிகள் அல்ல. திறமை வாய்ந்த பொறியாளர்கள் தான். இது பார்ப்பதற்கு அல்ல, பறப்பதற்காகவே உருவாக்கப்பட்டது’ என்று கூறி மூத்த விஞ்ஞானிகளை மட்டும் அல்லாது அனைவரையும் வியக்க வைத்தார் கலாம். என்றாலும் கூட, சில பொறமைக் காரர்கள் ஹோவர் ரக விமானத்தை சில தேவையற்ற காரணங்களைக் காட்டி இராணுவத்தில் அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று ஒதுக்கி வைத்து விட்டனர். எனினும் அதற்காக கலாம் மனம் தளரவில்லை. மாறாக இதனை ஒரு அனுபவமாக எடுத்துக் கொண்டார்.

Comments