எம். ஐ.டி. யில் கலாம் ஒரு பார்வை
உலகில் தலை சிறந்த அறிவியல் வல்லுனர்களின் வரலாற்றினை ஆர்வத்துடன் தேடித் தேடி படிக்கும் இயல்பு கொண்ட கலாமிற்கு தானும் ஒரு அறிவியல் மேதையாக ஆக வேண்டும் என்ற கனவும், லட்சியமும் இருந்து வந்தது. நான்காண்டுகள் கடுமையாக உழைத்துப் படித்து இயற்பியல் பட்டத்தைப் பெற்ற கலாம் மேல் படிப்புக்காக திருச்சியில் இருந்து சென்னைக்குப் பயணம் ஆனார். அப்போது விமானப் பொறியியல் பட்டதாரியாக ஆக வேண்டும் என்ற விருப்பம் தான் கலாமின் எண்ணத்தில் இருந்து வந்தது. அதனை நிறைவேற்றிக் கொள்ள எம். ஐ.டி. யில் விண்ணப்பம் வாங்கி வந்து விண்ணப்பித்தார் கலாம். அக்காலத்தில் எம். ஐ.டி. யில் படிப்பது சுலபமான காரியம் அல்ல. இருந்தாலும் நமது கலாம் அவர்கள் எம். ஐ.டி. யின் மூலமாக scholar ship இல் தேர்வு பெற்றார். எனினும் கல்லூரிக்கு குறைந்த பட்ச கட்டணம் 1600 ரூபாயை கட்ட வேண்டி இருந்தது. அதற்கு அவரது சகோதரி தனது நகைகளை வைத்து உதவினார்கள். அதனால் கலாம் தனது படிப்பை எம். ஐ.டி. யில் தடை இன்றித் தொடர்ந்தார். ஆசிரியர்கள் பாடம் நடத்தும் சமயத்தில் மிகக் கவனமாக அதனை உள் வாங்கி குறிப்பும் எடுத்து வந்தார். அத்துடன் பல சவால்களைக் கடந்து செயல் திட்டப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று எம். ஐ.டி. யில் நன்மதிப்புடன் பட்டம் பெற்று சாதித்துக் காட்டினார் காலம்.
Comments
Post a Comment