சிறுவயதில் கலாமிற்கு பிடித்த விமானம்
கலாமிற்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்போது இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்தது. பள்ளி மாணவனாக இருந்த கலாம், அதிகாலையில் எழுந்து செய்தித்தாள் விநியோகிக்கும் வேலையில் ஈடுபடுவார். செய்தித்தாள்களில் வெளிவருகிற உலகப் போர் குறித்த செய்திகளைக் கவனமாகப் படிப்பார். முதலில் தினமணி நாளிதழை எடுத்து ஸ்பிட்ஃபயர் ஃபைட்டர் விமானம், லுஃப்ட்வாஃப் விமானத்துக்கு எதிராக எப்படி சண்டை போட்டது என்பதை ஒரு வரிவிடாமல் வாசிப்பார்.
முதல் உலகப் போருக்குப் பின்னால் உலகில் பல நாடுகளில் விமானப்படை நிரந்தர அம்சமாகியது. போட்டி போட்டுக் கொண்டு ரகம்ரகமான போர் விமானங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, ஸ்பிட்ஃபயர். அந்த விமானம் பற்றி அப்போது பரபரப்பாகப் பேசிக் கொள்வார்கள். இன்றைக்கும் உலகின் மிகச்சிறந்த போர் விமானம் என்று பேசப்படும் அந்த விமானத்தின் விசிறியாக இருந்தார் கலாம். விமானவியலில் மோகம் கொண்டு கலாம் அலைந்ததற்கு ஸ்பிட்ஃபயர் விமானம் முழுமுதற் காரணம் ஆகும்.
போர் விமானங்களுக்கு இணையாக செய்தித்தாள்களில் இடம்பிடித்த உலகத் தலைவர்களின் புகைப்படங்களும் கலாமை உசுப்பேற்றின. கலாம் நண்பர்களிடம் சொன்னார் -‘பார், என் பெயரும் புகைப்படமும் இதேபோல செய்தித்தாள்களில் இடம்பெறும் நாள் நிச்சயம் வரும்’ என்று.
Comments
Post a Comment